வியாபாரி அடித்து கடையை உடைக்கும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுக்குமா மனித உரிமை ஆணையம்?

17 November 2021

*தாம்பரத்தில் பாதசாரி காய்கறி கடை வியாபாரி அடித்து கடையை உடைக்கும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுக்குமா மனித உரிமை ஆணையம்?

சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சி பெரியார் நகர் காய்கறி மார்க்கெட்டில் கடந்த 30 வருடங்களாக காய்கறி கடை நடத்தி வரும் மணிகண்டன் என்பவரை தாம்பரம் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் நாகராஜ் மற்றும் காளிதாஸ் ஆகிய இருவரும் இங்கே காய்கறி கடை நடத்த கூடாது உடனடியாக காலி செய் என கூறியுள்ளனர். 
நான் அனுமதி பெற்று தான் கடையை நடத்துகிறேன் எடுக்க முடியாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அதனை மீறி எடுக்க முற்பட்டாள் நான் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவேன் என்று கூச்சலிட்டு உள்ளார் இதனை சற்றும் பொருட்படுத்தாமல் சுகாதார ஆய்வாளர்கள் கடையை அடித்து நொறுக்கி மணிகண்டனை அடித்து துன்புறுத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது 
இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் மிகப்பெரிய மனித உரிமை மீறல் மீறப்பட்டுள்ளது இது கடும் கண்டனத்துக்குரியது என கேள்வி எழுப்பியுள்ளனர் மேலும் வியாபாரியை தாக்கிய சுகாதார ஆய்வாளர் நாகராஜ் மற்றும் காளிதாஸ் மீது தாம்பரம் காவல் நிலையத்தில் வியாபாரி புகார் அளித்துள்ளார் இதன் மீது தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது காலை நேரத்தில் நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது


*செய்தியாளர் ராஜ்கமல்*