துளசி மாலை அணிந்து சரண கோஷம் இட்டு, மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

17 November 2021


கார்த்திகை மாதம் துவங்கியதை ஒட்டி  சேலம் சாஸ்தா நகர் ஸ்ரீ ஐயப்பன் ஆசிரமத்தில் துளசி மாலை அணிந்து சரண கோஷம் இட்டு, மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு மண்டல பூஜை நடைபெறுவதையொட்டி கார்த்திகை மாதம் முதல் தேதி அன்று ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க செல்வது வழக்கம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா  கட்டுப்பாடு காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

தற்பொழுது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்ந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாள்தோறும் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க பட உள்ளது.

அதன்படி சபரிமலை ஐயப்பன் கோவில் மகரவிளக்கு மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை மாதம் முதல் தேதியான இன்று மாங்கனி மாநகர ஆணை சேலம் குரங்குசாவடி பகுதியில் உள்ள சாஸ்தா நகர் ஐயப்பன் ஆசிரமம் மற்றும் சேலம் டவுன் ரயில் நிலையம் அருகே உள்ள ஐயப்பன் திருக்கோவில் உள்ளிட்ட பல்வேறு திருக்கோவில்களில்  இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, அதிகாலை முதலே காவி உடை, கருப்பு உடை, நீல உடை, அணிந்து ஐய்யபக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்து  சரணகோஷம் இட்டபடி, குருசாமிகளிடம் துளசி மணி மாலை அணிந்து கொண்டு விரதம் இருக்க தொடங்கி உள்ளனர்.

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்ந்து உள்ள நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலைக்குச் செல்லும் சீசன் களை கட்ட தொடங்கியுள்ளது.