பணம் கேட்டு மிரட்டிய புகாரில் , திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா கைது

23 June 2022

பணம் கேட்டு மிரட்டிய புகாரில் , திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா கைது 


கடந்த 11 ஆம் தேதி உளுந்தூர்பேட்டை அருகே தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் சூர்யாவின் கார் சேதமடைந்ததாக கூறப்படுகிறது . இதனை அடுத்து , தனது காரில் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த பேருந்து நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்றை சூர்யா எடுத்துச் சென்று பணம் கேட்டு மிரட்டியதாக புகாரளிக்கப்பட்டது . பேருந்தின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் சூர்யாவை திருச்சி கண்டோன்மென்ட் காவல்துறையினர் கைது செய்தனர் .