வந்தவாசி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துணை ராணுவப் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு..

06 April 2021

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி டவுன், அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காலை 7 மணி முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களின் வாக்குகளை செலுத்தி வந்தனர். மேலும் இந்த பள்ளியில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கொரோனா சூழலில் சமூக இடைவெளியுடனும்,  முகக் கவசங்கள் அணிந்து கொண்டும்  வாக்களித்தனர்.