வாக்காளர்களை கவர்ந்த வாக்குச் சாவடி

06 April 2021

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த ஆயிலவாடி பள்ளியின் வாக்குச் சாவடியில் வாக்காளர் வியக்கும் வண்ணம் ரீட்ஸ் என்ற தன்னார்வ அமைப்பு இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகளையும், கோலங்களை இட்டும், தேர்தல் திருவிழா -  மாதிரி வாக்குசாவடி அமைப்பாக மாற்றம் பெற்று செயல்பட வைத்தது. வாக்களிக்க வருபவர்கள் இந்த செயல்பாடுகளை கண்டுகளித்த வண்ணம் முகக் கவசங்கள் அணிந்து, வரிசையாகச்  சென்று சமூக இடைவெளியுடன் வாக்களித்தனர்.