தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு சலுகை அறிவிப்பு!

12 May 2021

காய்கறி, மளிகை கடைகளை போன்று பழ கடைகளும் மதியம் 12 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


வரும் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் நண்பகல் 12 மணி வரை அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காய்கறி, மளிகை கடைகளை போன்று பழ கடைகளும் மதியம் 12 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிகளை கடைபிடித்து பழ கடைகளில் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மற்ற மருந்து கடைகளை போல நாட்டு மருந்து கடைகளும் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சலுகைகளை அரசு அறிவித்து உள்ளது.

கடன் உதவி பெறும் போது செலுத்த வேண்டிய முத்திரை தாள் பதிவு கட்டணம் டிசம்பரம் மாதம் வரை கால அவகாசம் நீட்டிப்பு.

சிட்கோ மனைகள் Fastrack அடிப்படையில் தொடர்ந்து ஒதுக்கீடு செய்யப்படும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் வழங்க ரூ.280 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்