தமிழக முதல்வர் செவிலியர் தின வாழ்த்து - ஊக்கத்தொகையும் அறிவிப்பு

12 May 2021

கொரோனா பேரிடர் காலம் போர்க்களத்திற்கு இணையானதுதான். இக்களத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் துணை நிற்கும் அனைத்து செவிலியர்களின் நலன்களும் உரிமைகளும் காக்கப்படும் என உறுதியளிக்கிறேன். 


இருபால் செவிலியர்களுக்கும் நன்றி கலந்த #nursesday2021 வாழ்த்துகள்! என முதலமைச்சர் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். 
 
மேலும் கொரோனா பணியில் 43 மருத்துவர்கள் தன்னுயிர் தந்து தியாகம் செய்திருக்கிறார்கள்- அவர்தம் குடும்பங்களுக்கு ரூ.25 இலட்சம் இழப்பீடாக வழங்கப்படும்.

மருத்துவர் உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைப் பணியாளர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

மக்களோடு நிற்கும் உங்களுடன் அரசு நிற்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.