இன்று கூடுகிறது மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர்..

11 May 2021

இன்று எம்.எல்.ஏக்களுக்குப் பதவி ஏற்பு விழா நடைபெறும் என தற்காலிய சபாநாயகம் பிச்சாண்டி தெரிவித்துள்ளார்.


திமுக கூட்டணி நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் 159 இடங்களில் வெற்றி பெற்றது. நேற்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கு.பிச்சாண்டியை தற்காலிக சபாநாயகராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

தமிழக சட்டப்பேரவைக்கு புதிய சபாநாயகரைத் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். முதல் சட்டமன்றத் கூட்டத்தொடர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 
 கூடுகிறது. எம்.எல்.ஏக்களுக்கு கு.பிச்சாண்டி பதவி ஏற்பு உறுதி மொழி செய்து வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.