இந்தியாவில் மே 18-ல் அறிமுகமாகும் Vivo X80 Series

13 May 2022

Vivo X80 சீரிஸ் இந்தியாவில் வரும் மே 18 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
Vivo X80 மற்றும் Vivo X80 Pro அடங்கிய சீரிஸ் கடந்த மாதம் சீனாவில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.


இந்த சீரிஸில் Vivo X80 Pro இரண்டு வெவ்வேறு வேரியன்ட்களில் வெளிவந்தது. ஒன்று MediaTek Dimensity 9000 SoC ப்ராசஸரை கொண்டது மற்றும் மற்றொன்று Qualcomm Snapdragon 8 Gen 1 SoC ப்ராசஸரை கொண்டது. 2 ஸ்மார்ட்போன்களும் முதலில் சீனாவிலும், அதைத் தொடர்ந்து மலேசியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டன. மலேசிய வேரியன்டில் உள்ள அதே ஸ்பெசிஃபிகேஷன்களுடன் இந்திய வேரியன்ட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் Vivo X80 Pro+ அறிமுகப்படுத்தப்படுமா என்பது தெரியவில்லை.


சீனாவில் Vivo X80 மற்றும் Vivo X80 Pro-வின் விலைகள்..


இந்த 2 போன்களின் விலை விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் பிரீமியம் பிரிவில் கிடைக்கும். Vivo X80 மொபைலின் 8GB + 128GB வேரியன்ட் சீனாவில் ஆரம்ப விலை CNY 3,699 அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.42,600-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் Vivo X80 Pro மொபைலின் 8GB + 256GB வேரியன்ட் CNY 5,499 (தோராயமாக ரூ.63,300) என்ற ஆரம்ப விலையில் அறிமுகமானது.


VIVO X80 சீரிஸ் ஸ்பெசிஃபிகேஷன்கள்:


Vivo X80 Pro மற்றும் Vivo X80 மொபைல்கள் இரண்டுமே 120Hz ரெஃப்ரஷ் ரேட் சப்போர்ட்டுடன் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இரண்டு மொபைல்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், Vivo X80 Pro மாடலில் 2K டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டு உள்ளது. அதேசமயம் Vivo X80 ஃபுல் HD+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது. Vivo X80 Pro மொபைல் 4700 mAh பேட்டரியை கொண்டுள்ளது, அதே நேரம் Vivo X80 மொபைலானது 4500 mAh பேட்டரியை கொண்டுள்ளது. 2 போன்களும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கின்றன. X80 Pro மொபைலானது 50W வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.


இரண்டிற்குமான வேறுபாடுகளில் முக்கியமானது X80 Pro மொபைல் Qualcomm Snapdragon 8 Gen 1 SoC ப்ராசஸரை கொண்டுள்ளது. அதேசமயம் X80 மொபைல் MediaTek Dimensity 9000 SoC ப்ராசஸருடன் வருகிறது. Vivo X80 Pro ஒரு குவாட் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இது OIS ஆதரவுடன் 50MP Samsung GN5 சென்சாரை கொண்டுள்ளது. பிரதான கேமராவுடன் 48MP அல்ட்ராவைடு கேமரா, 12MP போர்ட்ரெய்ட் கேமரா மற்றும் OIS சப்போர்ட்டுடன் 8MP பெரிஸ்கோப் கேமரா இதில் உள்ளது. செல்ஃபிக்களுக்காக, Vivo X80 Pro முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா சென்சார் உடன் வருகிறது.


அதே நேரம் Vivo X80 டிரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இது 50MP சோனி சென்சார், 12MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 12MP டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது.