விரைவில் வாட்ஸ்-அப் குரூப்ல இருக்கிறவங்களுக்கு செம அப்டேட்..

20 May 2022

உலகம் முழுவதும் பெரும்பாலானவர்களின் ஒரே சாய்ஸாக இருப்பது வாட்ஸ்அப்.வாட்ஸ் அப் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள், டாக்குமெண்ட்கள் என அனைத்துதரப்பு தரவுகளையும் அனுப்பும் வசதி இருப்பதால் பயனர்களுக்கு மிகவும் எளிதாக உள்ளது.


தனிப்பட்ட காரணங்களாக அல்லாமல் உலகம் முழுவதும் பணி ரீதியாகவும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் சோஷியல் மீடியாவாக இருந்து வருகிறது.பயனர்களின் வசதிகளுக்காகவும், தொழில் நுப்ட ரீதியாக அப்டேட் செய்யும் வகையிலும் வாட்ஸ் நிறுவனம் அதை மேம்படுத்தி வருகிறது. இந்நிலையில், தற்போது செய்யப்பட உள்ள இந்த புதிய அப்டேட்டால் பயனர்கள் பெரும் பயனடைவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி வாட்ஸ்அப் குழுவில் இருந்து எந்தவித அறிவிப்புமின்றி வெளியேற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சாதாரணமாக வாட்ஸ்அப் குழுவில் இருந்து வெளியேறினால் குரூப் சாட்டில் 'நோட்டிபிகேஷன்' வரும். இந்த தகவல் குழுவில் உள்ள அனைவருக்கும் தெரியும்படி வெளியாகும்.


இதனை பலரும் விரும்புவதில்லை. இந்த தகவலை கண்டவுடன் பலரும் அழைப்பு விடுத்து விசாரிக்கின்றனர். இந்த புதிய வசதியில் நீங்கள் குழுவில் இருந்து வெளியேறினால் குரூப் சாட்டில் இனி அறிவிப்பு வராது. ஆனால், அந்த குழுவின் 'அட்மின்' மட்டும் தெரிந்து கொள்ளும்படி வகையில் தகவல் சேரும். பரிசோதனை அடிப்படையில் கொண்டுவரப்பட்டு பின்னர் அதிகாரப்பூர்வமாக செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.