வரலாறு படிக்காமல் வரலாற்றை படைக்க முடியாது என்ற மேதகு பிரபாகரன் அவர்களின் கொள்கைக்கு ஏற்ப, தமிழ் சமூகத்தின் ஒவ்வொருவரும் தங்களின் கடந்த கால வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயம். நம்முடைய கடந்த கால வரலாறு பல்வேறு கூறுகளாவும் இயல்களாவும் பிரிந்து உள்ளது. சர்வாதிகாரர்கள் புரட்சியாளர்கள் என்று உலக வரலாற்றில் ஆரம்பித்து , தேச விடுதலை சுதந்திர போர் என்று இந்திய வரலாறு வரை ஒட்டுமொத்த தொகுப்புகள். சங்க இலக்கிய பாடலில் தொடங்கி கல்வெட்டு போன்ற தொல்லியல் தரவுகளுடன் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற ஆதி தமிழர்களின் வாழ்விட எச்சங்கள் வரை ஆகச்சிறந்த பல கட்டூரைகள். தமிழகத்தின் யுத்த சரித்திரங்கள் நிறைந்த சேர சோழ பாண்டியர் வரலாற்றில் தொடங்கி, அவர்களுக்கு பிந்தைய தமிழ் குடிகளின் வரலாறு வரை சரித்திரமிக்க வரலாற்று பதிவுகள். ஆதி தமிழர்கள் கண்டறிந்த அறிவியலும் அதனை நிறுபிக்கும் இலக்கிய சான்றுகளும் என பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக காலம் முழுவதும் போராடிய புரட்சிமிக்க தலைவர்களின் வாழ்க்கையை நினைவு படுத்த கூடிய வரலாற்று பதிவுகள் என ஒட்டுமொத்த கட்டூரைகள் தொகுப்புகள்.