அன்பார்ந்த நேயர்களே,
வளர்ந்து வரும் இன்றைய கம்ப்யூட்டர் காலக்கட்டத்தில் குடும்பப் பராமரிப்பு, சமூக பிரச்சினை, வேலை பளு என கம்ப்யூட்டர் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இப்படி வேகமாக ஓடும் நம் அன்றாட வாழ்க்கையில் நாட்டு நடப்பை தெரிந்து கொள்வதற்கும் நமது அறிவை மேம்படுத்துவதற்கும் கூட நேரமில்லாமல் நகர்கிறது நம் வாழ்க்கை. இதை ஈடு செய்வதற்காகவே “கொற்றவை நியூஸ்” அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளோம்.
உலக செய்திகள், ஆன்மீக செய்திகள், வணிக செய்திகள், விளையாட்டு செய்திகள் என அன்றைய நடப்பு செய்திகளை மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக வெளியிட்டு வருகிறோம்.
நகரம் முதல் கிராமம் வரை வாழும் மாணவர்கள்,
இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரின் தனித்திறமைகளை
“கொற்றவை நியூஸ்” மூலம் வெளி உலகத்திற்கு கொண்டு
வருகிறோம்.
மேலும், உங்கள் பகுதியில் உள்ள நிறைகள், குறைகள் என அனைத்து பிரச்சினைகளையும் “கொற்றவை நியூஸ்” மூலமாக வெளி உலகத்திற்கு கொண்டு வருகிறோம். இதன் மூலம் உடனடி தீர்வு காண்பதற்கு கொற்றவை நியூஸ் அப்ளிகேஷன் உறுதுணையாக
இருக்கும் என்று நம்புகிறோம்.
பொது அறிவை வளர்த்துக் கொள்ள விரும்பும் மாணவர்கள் முதல் தமிழக வரலாறு, உலக வரலாறு என தெரிந்துக் கொள்ள விரும்பும் இன்றைய இளைய தலைமுறைக்கு ஈடு செய்யும் விதமாக நம் கொற்றவையில் தமிழ் சமூகங்கள் முதல் தமிழ் சாதிகள் வரை அவர்களுக்கான உண்மை வரலாற்றினை இங்கு பதிவு செய்கிறோம்.
இதன் மூலம் நம் முன்னோர்களின் வீரம், அறிவு சார்நத நிகழ்வுகள், அவர்களின் ஒற்றுமை, அவர்கள் செய்த உயிர் தியாகங்கள் என அனைத்தையும் இங்கு நினைவு கூறுகிறோம்.
மேலும் நம் வரலாற்று பகுதியில் இடம் பெறும் கட்டுரைகளில் எந்த சமூகத்தையும் உயர்த்தியோ, தாழ்த்தியோ பதிவு செய்யப்படவில்லை. இதனின் நோக்கம் நம் முன்னோர்கள் இன்று நாம்
சுதந்திரமாக வாழ்வதற்கு அவர்கள் பட்ட கஷ்டங்களை நாம் உணர வேண்டும் என்பதற்காக இக்கட்டுரைகள் இடம் பெறுகின்றன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆரசியல் தலைவர்கள் முதல் தமிழ் அறிஞர்கள் வரை அனைவரின் நேர்காணலும் விரைவில் உங்கள் பார்வைக்கு கொண்டு வர உள்ளோம். மேலும், தினந்தோறும் நாம் மகிழ்ந்து மற்றவர்களை மகிழ்விக்கும் விதமாக “ஸ்டேடஸ்” மற்றும் “ஸ்டேடஸ் வீடியோ” வெளியிடுகிறோம்.
உங்கள் பகுதியில் நடக்கும் நிகழ்வுகளை எங்கள் “அப்ளிகேஷன்” மற்றும் “மாதாந்திர இதழில்” இடம் பெற வேண்டுமென்றால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 72 9976 9976
எங்களின் இத்தகைய செயல்பாடுகள் மேன்மேலும் வளர உங்களின் ஆதரவு முக்கியம்…
உங்களின் ஆதரவே எங்களின் முயற்சி.
நன்றி!!!
Editor | Sub-Editor | TamilNadu Chief Reporter | Legal Advocate |
---|---|---|---|
Dr.Kotravai Nagarajan | R.Piramachi A.Sikkanthar Bathusha |
Rajesh | V.S.Veera Puthiran M.Com.,M.L., R.Nagaraj B.A.,B.L., |
Admin Head And Kotravai Teams