உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

15 September 2021

தமிழ்நாட்டில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்தல் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் உயர் நிலைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், தனித்துப் போட்டியிடப்போவதாக அந்த கட்சி அறிவித்துள்ளது.