வேலை வாங்கி தருவதாக கூறி மோசடிஆஜராகும்படி செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

21 September 2021

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் புகார்தாரர்களின் வாக்குமூலங்களை வழங்குவதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட இருவரை நேரில் ஆஜராகும்படி சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். அதன் பேரில், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில், புகார்தாரர்களின் வாக்குமூலத்தின் நகலை பெறுவதற்காக, அக்டோபர் 5ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.