தேவேந்திர குலவேளாளர் என அழைக்க ஆணையிட்ட பாரத பிரதமர்,தமிழக முதல்வர் க்கு நன்றி தெரிவித்து பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..

14 February 2021

தேவேந்திர குலவேளாளர் என அழைக்க ஆணையிட்ட பாரத பிரதமர்,தமிழக முதல்வர் க்கு நன்றி தெரிவித்து பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில்
ஏழு உட்பிரிவுகளை ஒன்றினைத்து "தேவேந்திர குலவேளாளர்" என அழைக்க ஆணையிட்ட பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கும் உறுதுனையாக இருந்த  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் நன்றி தெரிவித்து பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.. பள்ளன், குடும்பன், பண்ணாடி, தேவேந்திர குலத்தான்,வாதிரியான், காலாடி, கடையன் ஆகிய ஏழு உட்பிரிவுகளை ஒன்றினைத்து தேவேந்திரகுல வேளாளர் என ஒரே பெயராக அறிவிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கபட்ட நிலையில் இன்று சென்னை வந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஏழு உட்பிரிவுகளை ஒன்றினைத்து தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்வதாக அறிவித்தார்,

இதை தெடர்ந்து தாராபுரத்தில் தமிழ்நாடு தேவேந்திரர் இளைஞர் பேரவை மற்றும் தாராபுரம் வட்டார தேவேந்திரகுல வேளாளர் சமூகநல அறக்கட்டளையினர் டாக்டர். இரா.கணபதி குடும்பனார் தலைமையில் தங்களது சமூகமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் உறுதுனையாக இருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மத்திய மாநில அரசுகள் விவசாயத்தையும் நீர் மேலான்மையையும் தொழிலாக கொண்ட தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை தாழ்த்தபட்டோர் பட்டியல்  வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிகழ்ச்சியில் சமூக செயற்பாட்டாளர் ரங்கநாத பாண்டியர், மாவட்ட அமைப்பாளர் கருப்பசாமி, நகர அமைப்பாளர்கள் முருகேசன், நாச்சிமுத்து, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம் மற்றும் பரமேஸ்வரன், ராஜேஸ்குமார்,தினேஸ்குமார், கார்வேந்தன்,லட்சுமணன்,கருப்புசாமி, செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்