மதுரையில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட்போன் வழங்காமல் அலைக்கழிப்பதாக கூறி திடீரென சாலை மறியல்

12 February 2021

*மதுரையில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட்போன் வழங்காமல் அலைக்கழிப்பதாக  கூறி திடீரென சாலை மறியல் :  போக்குவரத்து பாதிப்பு.!!*

 தமிழக அரசு சார்பாக பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட்போன் வழங்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள 1200 மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட்போன் பெற விண்ணப்பித்த நிலையில் இதுவரை சுமார் 250 பேருக்கு மட்டுமே ஸ்மார்ட்போன் வழங்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்காமல் மாற்றுத்திறனாளி துறை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் நூற்றுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது பிறகு காவல்துறையின் பேச்சுவார்த்தைக்கு பிறகு சுமார் அரை மணி நேரம் கழித்து கலைந்து சென்றனர்.