சட்ட மன்ற உறுப்பினர்கள் தொகுதியில் அரசு நிகழ்ச்சியில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் கடும் கண்டனம் - ஆட்சியரிட

15 February 2021

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா அரசு அதிகாரிகள் துணையுடன் திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் தொகுதியில்  அரசு நிகழ்ச்சியில்  திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் கடும் கண்டனம் - ஆட்சியரிடம் புகார் . 

மதுரை மாவட்டத்தில் வடக்கு சட்டமன் தொகுதி அதிமுக  சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ராஜன் செல்லப்பா இவர் அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து கொண்டு திமுக சட்டமன்ற தொகுதிகளான் திருப்பரங்குன்றம் மற்றும் கிழக்கு தொகுதிகளில் அரசு நிகழ்ச்சிகளை நடத்துவதும் அடிக்கல் நாட்டுவதும், பெயர் பலகை வைப்பது என முறைகேடான செயல்களை தொடர்ந்து செய்து வருகிறார் இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக செயல்படுவதாக கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மதுரை  வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.மூர்த்தி, தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மு. மணிமாறன், திருப்பரங்குன்றம் திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் .சரவணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர் . இதில் ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக தலைவரிடம் அனுமதி பெற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரித்தார்.