திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

15 February 2021


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் கரூரில் நடக்க இருப்பதாக கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், திமுக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ வுமான செந்தில்பாலாஜி பேட்டி |

கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ வுமான செந்தில்பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பு கரூர் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களிடையே பேசிய கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ வுமான செந்தில்பாலாஜி.,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 70 பெரிய நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு சுமார் 5 ஆயிரம் பணியிடங்களுக்கு தேர்வு செய்கின்றனர் என்றார்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் செந்தில் பாலாஜி பவுண்டேஷன்ஸ் சார்பில் வரும் 21ம் தேதி சேலம் பைபாஸ் சாலையில் உள்ள ஜெய்ராம் வித்யா பவன் மெட்ரிக் பள்ளியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.  இதில், 70க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர். சுமார் 5 பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்கின்றனர். இதை மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவர், இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு  ஆன்லயனில் பதிவு செய்யும் மாணவ மாணவிகளுக்கு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தகுதி அடிப்படையில் அரசு பணிக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார். திமுக சார்பில், கரூரில் அப்துல் கலாம் அறிவியல் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், திறமையுள்ள மாணவ மாணவிகள்., அறிவியல் தொடர்பான கண்டுபிடிப்புகளை மேம்படுத்தும் வகையில், இந்த ஆராய்ச்சி மையத்தை பயன்படுத்தி கொள்ளலாம். ஆராய்ச்சிக்கு  தேவைப்படும் உபகரணங்கள் வாங்கி தரப்படும் என்றார்