திருவண்ணாமலையில் 2668 அடி உயரத்தில் ஏற்றப்பட்டது அண்ணாமலை தீபம்

29 November 2020

கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலையில் 2668 அடி உயரத்தில் அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது.

கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையில் வருடந்தோறும் அண்ணாமலை தீபம் ஏற்றப்படுவது வழக்கமாகும்.   திருவண்ணாமலை உச்சியில் ஏற்றப்படும் இந்த தீபத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கமாகும்.

இந்த வருடம் கொரோனா தாக்கத்தினால் பக்தர்களுக்குத் திருவண்ணாமலைக்கும் கோவிலுக்கும், வர தடை விதிக்கப்பட்டுள்ளது.  வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.

இப்போது 2668 அடி உயரத்தில் உள்ள திருவண்ணாமலை உச்சியில் அண்ணாமலை தீபம் ஏற்றபட்டுள்ளது.  இந்த தீபம் 3500 கிலோ நெய் மற்றும் 1000 மீட்டர் காடா துணியை பயன்படுத்தி ஏற்றப்பட்டுள்ளது.  இந்த தீபம் இன்று முதல் 11 நாட்கள் எரிய உள்ளது.