இத்தாலியில் 20 மாடிகளை கொண்ட குடியிருப்புக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

30 August 2021

மிலன் நகரில் உள்ள அந்த 60 மீட்டர் உயர கட்டடத்தின் 15வது தளத்தில் பற்றிய தீ, மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 20க்கும் அதிகமானோரை பத்திரமாக மீட்டனர். இருப்பினும், தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அடுக்குமாடி கட்டடத்திற்குள் சென்று மீட்புப்பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.
தீ விபத்தில் யாரேனும் சிக்கியுள்ளனரா? உயிரிழப்பு ஏற்பட்டதா என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. அடுக்குமாடி கட்டடத்தில் தீயை அணைக்கும்போது விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகையும் வெளியேறியது. 20 மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.