இந்தியர்கள் இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

29 August 2021

கொரோனா பரவல் காரணமாக இந்தியர்கள் இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது.
2 தவணை தடுப்பூசி போட்டு, 72 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்கும் இந்தியர்கள் தங்கள் நாட்டுக்கு வரலாம் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்னா ரணதுங்கே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதையடுத்து இந்தியாவிலிருந்து தொழில் ரீதியாகவும் சுற்றுலா ரீதியாகவும் இலங்கை செல்வதற்கு இருந்த தடை அகன்றுள்ளது.

இதற்கிடையே இலங்கையில் கொரோனா தொற்று முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ள நிலையில் பொது முடக்க கட்டுப்பாடுகளை வரும் 7ஆம் தேதி வரை அந்நாட்டு அரசு நீட்டித்துள்ளது.