ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லுரி மாணவன் 11 நிமிடங்களில் 500 புஷ்அப்ஸ் தண்டால் எடுத்து சாதனை!

18 June 2022

ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லுரி மாணவன் 11 நிமிடங்களில் 500 புஷ்அப்ஸ் தண்டால் எடுத்து சாதனை!

சென்னை : சாதனை நாயகனாக ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லுரி மாணவன் M. கோகுல்நாத் 11 நிமிடங்களில் 500 புஷ்அப்ஸ் தண்டால் எடுத்து பீனிக்ஸ் புக் அப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் இல் இடம் பிடித்துள்ளார் . 

இச்சாதனை உலக சாதனைப் புத்தகத்தின் நிறுவனர் கிராமிய புதல்வன் , Dr. கலைஅரசன் , சென்னை இயக்குனர் Dr. சுமன் மற்றும் தீர்ப்பாளர் T. வருண்குமார் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது . 

பதக்கமும் சான்றிதழும் சென்னை இயக்குனர் மற்றும் இக்கல்லூரி முதல்வர் அவர்களால் வழங்கப்பட்டது .