பாலங்களுக்கு வர்ணம் பூசி பாதுகாக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

23 June 2021

*திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகளில் கட்டப்பட்டுள்ள* 


திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகளில் கட்டப்பட்டுள்ள பாலங்களுக்கு வர்ணம் பூசி பாதுகாக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியில் பாமணி ஆறு, கோரையாறு, அரிச்சந்திராநதி, முல்லையாறு, அடப்பாறு, பொண்ணு கொண்டான்ஆறு, சாளுவன்ஆறு, அய்யனார்ஆறு போன்ற ஆறுகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் 20-க்கும்மேற்பட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. தற்போது நீர்நிலைகளில் உள்ள பாசன மதகுகள், நீர் ஒழுங்கி ரெகுலேட்டர்கள், சட்ரஸ்கள் ஆகியவற்றுக்கு வர்ணம் பூசி வருகிறார்கள்.

இதைப்போல ஆறுகளில் கட்டப்பட்டுள்ள பாலங்களுக்கு வர்ணம் பூசி பராமரித்தால் நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். எனவே கோட்டூர் பகுதியில் உள்ள ஆறுகள் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள ஆறுகளில் கட்டப்பட்டுள்ள அனைத்து பாலங்களுக்கும் வர்ணம் பூசி கொரோனா நோய் தொற்று விழிப்புணர்வு அடங்கிய வாசகங்களை எழுதி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடவடிக்கை எடுக்கப்படுமா?

நிருபர் மீனா திருவாரூர்