அரசு நிலங்களில் அதிகரித்து வரும் ஆக்கிராமப்புகள்.....!

20 June 2021

அரசு நிலங்களில் அதிகரித்து வரும்
ஆக்கிராமப்புகள்.....

கிருஷ்ணகிரி மாவட்டம் ஆந்திரா,கர்நாடகா இரண்டு மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் முழுவதும் வனபகுதிகலை கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியான வேப்பனப்பள்ளியை சுற்றியும் வனபகுதி மற்றும் ஏறிகள், நிரோடைகள், நெடுஞ்சாலையின் ஓரமாக அதிகமாகவே அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன.இங்கு உள்ள புறம்போக்கு நிலங்களில் சிலர்
கிராம நிர்வாக அலுவலரையும், அரசு அதிகாரிகளையும் கையில் கொண்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஓலை கொட்டகை அமைத்தும் வீடு கட்டியும் வாகனங்களை கொண்டு சமன் செய்தும் வேளிகள் அமைத்தும் ஆக்கிரமத்து வருகின்றனர்.மழை காலங்களில் மலை பகுதிகளில் இருந்து வரும் மழை நீர் நிரோடைகளில் செல்லாமல் விவசாய பகுதிகளில் செல்வதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதே போன்று ஏரிகளின் ஓரமாக வேளிகள் அமைத்து விவசாயம் செய்து வருவதல் கால் நடைகள் மேய்சாலும் பாதிக்கபடுகிறார்கள். இந்த பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளின் ஓரமாக உள்ள புறம்போக்கு நிலங்களில் சுத்தம் செய்தும் அதிகமாகவே ஆக்கிரமித்து வருகின்றனர். இங்குள்ள அரசு அதிகாரிகள் யாரும் இதை பற்றி யாரும் கண்டுகொள்வதிலை.எனவே மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கும் வருவாய் துறை அதிகாரிகளுக்கும், பொதுப்பணி துறை அதிகாரிகளுக்கும் சமீப காலங்களில் வேப்பனபள்ளி பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரி, குளம், நிரோடை, சாலையில் ஓரம் உள்ள அரசு நிலங்களை உரிய விசாரணை நடத்தி
மீட்டு எடுக்க சமூக ஆர்வலர்களும், வேப்பனப்பள்ளி சுற்று வட்டார பொது மக்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 *கொற்றவை செய்தியாளர். வேப்பனப்பள்ளி.
மகேந்திரன்.*