திறக்கபடுமா.? துணை சுகதாரநிலையம்.... இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கும் அவலம்....

16 June 2021

திறக்கபடுமா.? துணை சுகதாரநிலையம்....
இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கும் அவலம்....

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி  அடுத்த காமண்தொட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை இயங்கிவருகிறது.இந்த மருத்துவமனையில்  போதிய இடவசதி இல்லததால் இங்கு வரும் நோயாளிகள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். இதை கருத்தில்க்கொண்டு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி மக்கள் அரசுக்கு துணை சுகாதார நிலையம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டம் 2018-2019 மூலம் ரூபாய் :  23.00. இலட்சம் மதிப்புள்ள கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை இரண்டு ஆண்டுகளாக திறக்க படாமல் மருத்துவமனை சுற்றிலும் புதர் மண்டிக்கிடக்கிறது. இந்த மருத்துவமனை பயன்பாட்டுக்கு வந்தால் இப்பகுதியில்        இருக்கும்
15  க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் மற்றும் இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பயன்பெறுவார்கள். எனவே மருத்துவ மனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் கொண்டு பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர மாவட்ட சுகாதார நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

வேப்பனப்பள்ளி கொற்றவை செய்தியாளர் : மகேந்திரன்.