வாணியம்பாடியில் கடந்த 6 மாதங்களாக ரூ.10, 20, 50, 100, 1000 உள்ளிட்ட முத்திரை தாள்கள் தட்டுப்பாடு. மாணவர்கள், பொதுமக்கள் அவதி.!

30 October 2020

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சார் நிலைக கருவூலம் செயல்பட்டு வருகின்றது. இந்த கருவூலத்தில் ரூ.10 முதல் ரூ.25 ஆயிரம் வரை முத்திரைத் தாள்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதனை முத்திரைத்தாள் அங்கிகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் வாங்கி பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக விற்பணியாளர்களிடம் ரூ.10, 20, 50, 100, 1000 உள்ளிட்ட முத்திரை தாள்கள் கிடைப்பதில்லை. இதனால் மாணவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து உறுதி மொழி சான்று பெறுவதற்கு ரூ.10 முத்திரைத் தாளுக்கு பதிலாக ரூ.50க்கான முத்திரைத் தாள் பயண்படுத்தி வருகின்றனர்.

பிறப்பு, இறப்பு சான்று, வாடகை மற்றும் சொத்து அடமானம் ஆகியவற்றைக்காக ரூ.20க்கான முத்தரை தாளுக்கு பதிலாக ரூ.50, ரூ.100க்கான தாள்களை பயண்படுத்தி வருகின்றனர். மேலும் நீதிமன்றம் விள்ளைக்காக பயன்படுத்தும் ரூ.1, 2, 5 ஆகியவை முத்தரைதாள் விற்பனையாளர்களிடம் கிடைப்பதில்லை. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். ஆகையால் மாவட்ட நிர்வாகம் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து சார் நிலைக கருவூல அலுவலர் சுரேஷ் குமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது :-

ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை முத்தரைத்தால்கள் அங்கிகரிக்கப்பட்ட விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்து வருகின்றோம். மேலும் தட்டுபட்டு உள்ள முத்தரைதாள்கள் வரும் திங்கள்கிழமை பூர்த்து செய்யப்படும் என்றார்.