வணிக வரி செலுத்தாமல் முறைகேடாக மதுரைக்கு கடத்திவரப்பட்ட கன்டெய்னர் லாரியுடன் பறிமுதல்

15 September 2021

வணிக வரி செலுத்தாமல் முறைகேடாக மதுரைக்கு கடத்திவரப்பட்ட 6 கோடி ரூபாய் மதிப்பிலான சோலார் பேனல்கள் கன்டெய்னர் லாரியுடன் பறிமுதல்


ஆயுதம் ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டு வணிக வரித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை.

மதுரை புற வட்டச் சாலையில் சந்தேகத்திற்கு இடமாக வந்த கண்டெய்னர் லாரியை மதுரை வணிகவரித்துறை புலனாய்வு குழுவினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சோலார் பேனல்கள் பில் இல்லாமல் வரி ஏய்ப்பு செய்து கடத்திவரப்பட்டது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து வணிக வரித்துறை அதிகாரிகள் கண்டெய்னர் லாரியை நிறுத்தி ஆய்வு செய்து வருகின்றனர்.

 போலீஸ் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரியில் உள்ள சோலார் பேனல்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது யாருக்காக கொண்டு வரப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வரப்படுகிறது. தொடர்ந்து போலீசாரும் வணிகவரி துறையினரும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


 6 கோடி ரூபாய் மதிப்பிலான சோலார் பேனல்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது

வாகனத்தை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்


 மும்பையிலிருந்து நெல்லைக்கு கண்டெய்னர் மூலம் 6 கோடி ரூபாய் மதிப்பிலான சோலார் பேனல் கொண்டு சென்றபோது வனிகவரித்துறை புலனாய்வு பிரிவு சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றது தெரிய வந்துள்ளது,