தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த ₹26 கோடி மதிப்புள்ள 530 கிலோ கஞ்சா மற்றும் படகு பறிமுதல்

10 October 2021



தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த ₹26 கோடி மதிப்புள்ள 530 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மேலும் சம்பந்தப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, பீடி இலை, மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. 
போலீசாரும் தொடர்ந்து கண்காணித்து கடத்தலை தடுத்துவருகுன்றனர்.
இந்நிலையில் போதை பொருள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய் அனிதா, எஸ்ஐக்கள் ஜீவமணி தர்மராஜ், வில்லியம் பெஞ்சமின், வேல்ராஜ் செந்தில்குமார், ஏட்டுகள் இருதய ராஜ்குமார், ராமர் ஆகியோர் நேற்று நள்ளிரவு தருவைகுளம் கடற்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

அப்போது அங்கு சிலர் படகில் சாக்கு மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருப்பது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். போலீசார் அவர்களை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள்,

தூத்துக்குடி தருவைகுளம் சந்தியாகப்பர் கோவில் கடற்கரை பகுதியில் கியூ பிரிவு ஆய்வாளர் விஜயஅனிதா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் வில்லியம் பெஞ்சமின், ஜீவமணி தர்மராஜ், தலைமை காவலர் ராமர் மற்றும் இருதய ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த IND-TN-12-MO-2669 பதிவு எண் கொண்ட "பெரில்” என்ற பெயரிட்ட படகினை சோதனையிட்டதில், 35 கிலோ எடையுள்ள 15 மூட்டை கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ₹26 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
கடத்தலில் ஈடுபட்ட
(1) திரேஸ்புரம் மாதவன் நாயர் காலனி ஜார்ஜ் மகன் அந்தோணி பிச்சை,(வயது 41),
(2) தூத்துக்குடி திரேஸ்புரம் சிலுவையார் கோவில் தெருவை சேர்ந்த வின்சென்ட் மகன் லெனிஸ்டன் (வயது48) ,
(3) எஸ்.எஸ். மாணிக்கபுரம் வேளாங்கண்ணி மாதா கெபி அருகிலுள்ள ஜேசு மகன் ஜெபஸ்டன் (வயது 37), (4)ராமநாதபுரம் தங்கச்சிமடம், விக்டோரியா தெருவை சேர்ந்த அற்புதம் மகன் செல்வராஜ் (வயது 25), ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
மேலும் விசாரணையில் படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்த தயாராக இருந்ததாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து 530 கிலோ எடையுள்ள கஞ்சா மூட்டைகள் மற்றும் படகினை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்து, போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசாரிடம், கியூ பிரிவு போலீஸார் ஒப்படைத்தனர்.