தூத்துக்குடியில் ஏழை விளையாட்டு வீராங்கணைகளுக்கு கருணை காட்டிய கனிமொழி

10 October 2021

தூத்துக்குடியில் ஏழை விளையாட்டு வீராங்கணைகளுக்கு கருணை காட்டிய கனிமொழி எம்.பி’யின் மனிதாபிமான செயலுக்கு பலதரப்பினரும் பாராட்டு

 தூத்துக்குடியில் வ.உ.சி.-யின் 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு, வ.உ.சி. கல்லூரி சார்பாக பள்ளி மாணவ, மாணவியருக்கான சுமார் 9 கி.மீ தூரம் மினி மாராத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தென்காசியைச் சேர்ந்த சில மாணவிகள் காலில் ஷீ இல்லாமல் ஓடி வந்ததால் காலில் சிராய்ப்புகள், கீரல்கள் ஏற்பட்டு 
ரத்தம் வழிந்தது. இதைக்கண்ட கனிமொழி எம்.பி அந்த மாணவிகளை அழைத்து நீங்கள் ஷீஅணிந்து ஓடியிருக்கலாமே என்று கேட்டுள்ளார்; அதற்கு மாணவிகள் நாங்கள் ஏழை குடும்பத்தில் பிறந்தவர்கள், எங்களுக்கு ஸ்போர்ட்ஸ் ஷீ வாங்கும் அளவிற்கு வசதி கிடையாது என்று 
கூறியிருக்கிறார்கள். உடனடியாக விழா  முடிந்ததும்  மாணவ, மாணவிகளை கடைக்கு அழைத்து சென்று அவர்களுக்கு தேவையான ஷீக்களை வாங்கி 
கொடுத்துள்ளார். அதற்கு அந்த வீராங்கனைகள் தாங்கள் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் விளையாட்டில் செயல்படுவோம் என்று 
பெருமிதத்துடன் கூறிச் சென்றனர்.
கனிமொழி எம்.பி. யின் மனிதாபிமானத்தை சமூக ஆர்வலர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.