அதிவேகமாக பரந்த கார் அதிர்ச்சியில் மக்கள்

16 October 2020

சென்னையில் உள்ள கோடம்பாக்கம் பகுதியில் காரொன்று தாறுமாறாக சென்று கொண்டு இருந்துள்ளது. இதனைக்கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய பொதுமக்கள், கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக வடபழனி நோக்கி சென்ற காரை மடக்கி பிடித்தனர்.

இந்த காரில், ஓட்டுனரின் இருக்கையில் பெண்ணொருவர் மதுபோதையில் இருந்ததும், அவரே காரினை இயக்கி வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், அந்த பெண்மணி ஆங்கிலத்தில் மக்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தொடர்ந்து மக்கள் குவிந்தவண்ணம் இருந்ததால் அலைபேசியில் தனக்கு தெரிந்தவரை அழைத்துள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கொடி பறக்கும் வாகனத்தில் வந்த அரசியல் பிரமுகர் ஒருவர், பெண்மணியை வாகனத்தில் ஏற்றிச்செல்ல முயற்சி செய்துள்ளார்.