ஊராட்சி மன்ற செயலாளர்கள் திடீர் போராட்டம்

16 October 2020

	

கடலூர் தெற்கு திட்டை ஊராட்சி செயலாளர் சிந்துஜா மீது போடப்பட்ட வன்முறை தடுப்பு சட்டத்தை திரும்பப் பெறக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநில தலைவர் ஜான் போஸ்கோ தலைமையில் தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடைபெற உள்ளது.

தெற்கு திட்ட பட்டியலின ஊராட்சி தலைவர் அவமதிக்கப்பட்ட வழக்கில் சுகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து, ராஜேஸ்வரி புவனகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் மோகன்ராஜ் மற்றும் ஊராட்சி செயலாளர் சிந்துஜா மீது வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சிந்துஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டது.

இருவரும் வன்முறை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை கண்டித்து தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் இன்று போராட்டம் நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.