கும்பகோணம் லால்பகதூர் சாலையில் உள்ள மின் கம்பங்களை அகற்ற கோரிக்கை !

25 July 2021


கும்பகோணம் சென்ற ஆட்சி காலத்தில் நகராட்சிக்குட்பட்ட அகலமாக இருந்த LBS சாலையின் நடுவில், கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும்,அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டது. அவற்றை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் நேரில் பார்வையிட்டு, சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த மின் கம்பங்களை அகற்றுவது குறித்து ஆய்வு செய்து அதிகாரியிடம் அகற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.உடனே அதிகாரிகள் இன்னும் 15 நாளில் அகற்றப்படும் என்று தெரிவித்தனர். அருகில், கும்பகோணம் பெருநகர திமுக செயலாளர் சு.ப.தமிழழகன் , கும்பகோணம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.கே.பாஸ்கர் , கும்பகோணம் நகராட்சி ஆணையர் நவேந்திரன் , பொறியாளர், உதவி பொறியாளர் , மின் பொறியாளர் , மற்றும் திமுக நிர்வாகிகள் டி.ஆர்.அனந்தராமன் , சீனிவாசன் , சுந்தர்ராஜன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

 செய்தியாளர்
 கோ வளங்கோவன் கும்பகோணம்