60 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் வந்தவாசி நூலகம் - சொந்த கட்டிடம் வேண்டி நூலக வாசகர்கள் எதிர்பார்ப்பு..

23 July 2021


திருவண்ணாமலை மாவட்டம், வரலாற்றுச் சிறப்புமிக்க வந்தவாசி நகரில் உள்ள நூலகமானது கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கட்டிடத்திலேயே இயங்கி கொண்டு வருகிறது. புத்தக ஆர்வலர்களும், பல்வேறு பள்ளிகளின் மாணவர்களும், கல்லூரி மாணவர்களும், பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்போரும், இந்நூலகத்தை தினமும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த நூலகத்தில் 12,000 க்கும் மேற்பட்ட நூலக உறுப்பினர்களும், 200 க்கும் மேற்பட்டோர் புரவலர்களாகவும் இணைந்துள்ளனர். இந்த நூலகத்தில் 40,000 க்கும் மேற்பட்ட பல்துறை சார்ந்த நூல்கள் உள்ளன. ஆனால் பயன்பாடுகள் குறைவாக உள்ளது. மேலும் இந்நூலகத்தின் மூலமாக, கடந்த ஆண்டு தமிழக அரசின் சிறந்த நல்நூலகருக்கான விருதும் கிடைத்துள்ளது. மூன்றான்டுக்கு ஒரு முறை வந்தவாசியின் பல்வேறு தெருக்களில் மாறி மாறி வாடகை கட்டிடத்தில் இயங்கி கொண்டு வருகிறது. எனவே துறை சார்ந்த அலுவலர்களும், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினரும் இந்நூலகம் சொந்த கட்டிடத்தில் இயங்குவதற்கான ஒரு முக்கிய தீர்வு காண்பார்கள் என்று பொதுமக்களும், புத்தக ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.