ஆக்சிஜனின்‌ அரசியல்!

28 April 2021

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் உற்பத்தி செய்து கொள்ளலாம் என்று சில நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியிருந்தது. இவ்வாறு ஆக்சிஜன் தேவை நாட்டில் நிலவி வரும் சூழ்நிலையில் சில கேள்விகள் எழுவதை தவிர்த்து விட முடியாது!  

ஸ்டெர்லைட் ஆலை இல்லாமல் இருந்திருந்தால் அரசு  ஆக்சிஜன் தயாரிக்காமலே இருந்திடுமா?

ஆக்சிஜன் தயாரிப்பதற்கான வேறு வழியை தேடுமா?

அரசு மக்கள் உயிர் காக்கும் பொருளுக்கு ஏன் தனியார்களை சார்ந்திருக்க வேண்டும்?

ஸ்டெர்லைட் மூடியது மூடியதாகவே இருக்கட்டும்.
மக்கள் உணர்வுகளுக்கு அரசு கட்டாயம் செவி சாய்த்தாக வேண்டுமா? 

கோரிக்கைகளோடு நிபந்தனைகளோடு ஸ்டெர்லைட் திறப்பதை அனுமதிக்கலாம் என்று அரசியல் கட்சிகள் திமுக உட்பட கூறுவது இலாப நோக்கமாக தான் இருக்கும் என்றே கருத வேண்டுமா? 

இது போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா? 

ஒரு நாட்டில் அடிப்படை தேவைகளுள் ஒன்று சுகாதாரம். அதை கட்டமைக்க முன்னாள் இன்னாள் அரசுகள் தவறிவிட்டன என்பது கண்கூடாக தெரிகிறது. ஒரு தனியார் நிறுவனம் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றி தான் அரசு இயந்திரம் இயங்கும் இந்த  அல்ல நிலை உண்மையில் வேதனைப்பட வேண்டிய விஷயம்தான்!