ஐபிஎல் போட்டியா? ஆக்ஸிஜன் பற்றாக்குறையா?

27 April 2021

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்து வரும் சூழலில் ஐ‌பிஎல்-ன் 14 வது சீசன் கிரிக்கெட் போட்டி களைகட்டிவருகிறது. இதனால் இந்தியாவில் இருக்கும் பலர் கொரோனா பரவலின் பக்கம் தங்களின் கவனத்தை திரும்புவதில்லை என பத்திரிக்கையாளர்களும், கிரிக்கெட் வீரர்களும் தங்களின் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இதைப்பற்றி  அவர்களின் கருத்துக்கள்! 

ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தனது ட்விட்டர் பதிவில் இந்தியாவில் கொரானாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பயப்படும் வகையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அங்கு நடைபெறும் ஐ.பி.எல் தொடர் பொருத்தமற்றது இல்லையா? அல்லது மக்களைத் தொற்றில் இருந்து திசைதிருப்பவே போட்டிகள் நடத்தப்படுகிறதா? இது எதுவாக இருந்தாலும் இந்தியர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்'' என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் அன்டிரிவ் டை ," நாங்கள் இங்கு பாதுகாப்பாக இருக்கிறோம்.. ஆனால் இந்தியா பார்வையிலிருந்து பார்க்கையில் நிறுவனங்களும் அரசாங்கமும் ஐபிஎல்-ல் எவ்வளவு பணத்தை எவ்வாறு செலவிடுகின்றன.. மக்கள் மருத்துவமனையை பெற முடியாதபோது?" என அவர் சந்தேகத்தை எழுப்பி உள்ளார்.

இவர்களுக்கு ஒரு படி மேல் சென்று ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் அவரது சார்பாக 50 ஆயிரம் ஆஸ்திரேலியா டாலர்களை இந்தியாவுக்கு  ஆக்சிஜன் வாங்குவதற்காக பிரதமரின் " PM CARE" க்கு அளித்துள்ளார் என்பது பாராட்டுதலுக்குரியது.

தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இனிமேல் "ஐபிஎல்" தொடர்பான செய்திகளை வெளியிடப்போவதில்லை என அறிவித்திருக்கிறது.

நாடா ? விளையாட்டா? என்று முடிவெடுப்பது ரசிகர்கள் கைகளிலும் அரசின் கைகளிலும் தான் உள்ளது என்பதை மறுத்துவிடமுடியாது.