காரைக்குடியி : நாக்கால் நக்கி, காலால் மிதித்த வடமாநில தொழிலாளி: ரஸ்க் ஆலை மீது அதிரடி !

20 September 2021

நாக்கால் நக்கி, காலால் மிதித்த வடமாநில தொழிலாளி: ரஸ்க் ஆலை மீது அதிரடி !


காரைக்குடியில் ரஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலையில் ரஸ்க்குகளை பேக் செய்த போது வட மாநில தொழிலாளர் ஒருவர் அதனை தனது நாக்கால் நக்கி, தட்டில் வைக்கப்பட்டிருந்த ரஸ்க்குகளை காலால் தேய்த்தது தொடர்பான காணொளி இணையத்தில் வெளியாகி மக்களிடையே முகம் சுழிப்பை ஏற்படுத்தியது.

மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ரஸ்க்குகள் மீது இதுபோன்ற இழி செயல்களில் ஈடுபட்ட நபர் மீதும் தொடர்புடைய தொழிற்சாலைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன.

இந்நிலையில், காரைக்குடியில் உள்ள சுமார் பத்து ரஸ்க் பேக்டரிகள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தயாரிக்கப்பட்ட ரஸ்குகளை தரையில் கொட்டி அதனை பாக்கெட்டுகளில் நிரப்புவதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதனையடுத்து தரமற்ற, சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட சுமார் 200 கிலோ ரஸ்குகளை குப்பையில் கொட்டிய அதிகாரிகள் அந்த தொழிற்சாலைக்கு சீல் வைத்து, விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளனர்.