திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மற்றும் வினாடி - வினா....

13 April 2021

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான  திருக்குறள் ஒப்பித்தல் போட்டி மற்றும் வினாடி வினா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு இரும்பேடு ஊ.ஒ.தொ.பள்ளி தலைமை ஆசிரியர் க. வாசு தலைமை தாங்கினார். ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் வரவேற்றார். ஓய்வுபெற்ற முதுகலை தமிழாசிரியை அ. ராஜகுமாரி, கவிஞர் க. புனிதவதி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக, திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மைய நிறுவனர் பாவலர் ப. குப்பன் அவர்கள் பங்கேற்று,  மாணவர்களின் திருக்குறள் ஒப்பித்தல் நிகழ்வை பாராட்டி பேசினார். மேலும் திருக்குறளின் மேன்மையும், திருக்குறள் காட்டும் அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளையும் ஒப்பிட்டு விளக்கிப் பேசினார்.

உலக பொதுமறை நூல் திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் இந்நிகழ்வில்  பட்டதாரி ஆசிரியர் சையத் நாசர், சமூக ஆர்வலரும், அன்னபூரணி ஓட்டல் உரிமையாளருமான ந. முருகன், முதுகலை ஆசிரியர்கள் வி. வினோத் குமார், சரளா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவ மாணவிகள் திருவள்ளுவர் வேடமணிந்தவாறு திருக்குறளையும் அதன் பொருளையும் ஒப்புவித்தனர். திருக்குறள் ஒப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் திருக்குறள் புத்தகம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, பரதநாட்டியம் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வுடன் வந்தவாசியில் திருக்குறள் மன்றம் தொடக்க விழாவும், பாவலர் ப. குப்பன் அவர்களால் குறள் எழுதி தொடங்கப்பட்டது. இறுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சிறப்பாசிரியர் கு. சதானந்தன் நன்றி கூறினார்.