கொற்றவை நியூஸ் செய்தி எதிரொலியாக குடிநீர் தொட்டியை சுற்றி உள்ள குப்பை அகற்றம்.

12 June 2021

கொற்றவை நியூஸ் செய்தி எதிரொலியாக குடிநீர் தொட்டியை சுற்றி உள்ள குப்பை அகற்றம்.
 
ஜூன் 12

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் சிகரமாகனப்பள்ளி ஊராட்சியில் ஒகனேக்கல் கூட்டு குடிநீர் நீர் ஏற்றும் தொட்டி அமைந்துள்ளது.இந்த தொட்டியை சுற்றியும் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டிருந்ததை நேற்று கொற்றவை நியூஸ் செய்தியாக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக இன்று சிகரமகானப்பள்ளி ஊராட்சி சார்பாக சுத்தம் செய்யப்பட்டது.

பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக செய்தியாக    வெளியிட்ட கொற்றவை செய்தியாளர் மகேந்திரன் அவர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.