கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகில் உள்ள சிகரமாகணபள்ளி ஊராட்சி சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலம்!

11 June 2021

**சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலம்....** 


கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகில் உள்ள சிகரமாகணபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் என்னும் இடத்தில் ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் குடிநீர் நீரேற்றும் தொட்டி அமைக்கபட்டுள்ளது. இந்த தொட்டியின் கொள்ளவு  1.50000 லிட்டர் ஆகும்.இந்த தொட்டியை சுற்றி முழுவதும் சிகரமாகனபள்ளி ஊராட்சியில் இருந்து கொண்டுவரும் கழிவுகள், குப்பைகள் கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.இதை எந்த தலைவர்களும் அரசு அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர். இந்த குடிநீர் தொட்டியில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் செல்கின்றது. இங்குருக்கும் குப்பையலிருந்து கழிவுகளை பறவைகள் கொத்தி தொட்டியின் மீது அமர்ந்து செல்கிறது. இதனால் நோய் தொற்றும் அபாயம் உள்ளது.ஆகவே குப்பை கொட்டும் இடத்தை மாற்றவும் தொட்டியை சுற்றி உள்ள குப்பையை உடனடியாக சுத்தம் செய்யவும் சமூக ஆர்வலர்களின்  கோரிக்கை...

வேப்பனபள்ளி செய்தியாளர் :  மகேந்திரன்.