பயணாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய கோட்டசியர்

15 September 2021மதுரை மாவட்டம் மேலூர் வருவாய் கோட்டசியர் அலுவலகத்தில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மேலூர் வருவாய் கோட்டாசியர்  பிர்தௌஸ்பாத்திமா பயணாளிகளுக்கு அரசின் இலவசவீட்டுமனை பட்டா, ஆதரவற்ற விதவைசான்று, மற்றும் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் திரு. சோம சுந்தர சீனிவாசன், தலைமை உதவியாளர் திரு. ராஜாராம்  மற்றும் அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர்.