மதுரையில் எய்ம்ஸ் அமைக்க ஒரு கல் கூட  வைக்காமல்  மாணவர் சேர்க்கையை எப்படி நடத்துவது

15 September 2021

*மதுரையில் எய்ம்ஸ் அமைக்க ஒரு கல் கூட  வைக்காமல்  மாணவர் சேர்க்கையை எப்படி நடத்துவது எங்கு வைத்து நடத்துவது என கேள்வி தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் கேள்வி* மதுரை சிம்மக்கல் பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை துவக்கி வைத்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது,

 மக்களை தேடி மருத்துவம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.மருத்துவமனையை தேடி வர முடியாத மக்களுக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மருத்துவதுறை அடுத்தடுத்து முன்னேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரையில் எய்ம்ஸ் ல் மாணவர்கள் சேர்க்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்த நிதி அமைச்சர் 
*மதுரையில் எய்ம்ஸ் அமைக்க ஒரு கல் கூட  வைக்காமல் நிலத்தை தோண்டாமல்  மாணவர் சேர்க்கையை எப்படி நடத்துவது எங்கு வைத்து நடத்துவது என கேள்வி எழுப்பினார்*
நிதியும் ஒதுக்கீடு செய்யாமல் எப்படி மாணவர் சேர்க்கை நடத்துவது.கட்டிடமே இல்லாமல் எப்படி மருத்துவ கல்லூரி  நடத்துவது. 
மருத்துவ கல்வி என்பது  கஷ்டமான கல்வி, ஆய்வக கட்டிடம் இல்லாமல் எப்படி மருத்துவ கல்லூரியை நடத்துவது என தெரிவித்தார். 
மேலும் நாடு முழுதும் பல இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டு செயல்படுத்தவில்லை.
கொரோனோ பொது முடக்கத்தால் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்றுள்ளது.
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பணியை செய்து வருகிறோம்.
அதிமுக ஆட்சியில் தெளிவு இல்லாமல் முழு அடைப்பு செய்யப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர் ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வலியுறுத்தியுள்ளது குறித்த கேள்விக்கு? 
இந்திய  தேர்தல் ஆணையமே 8 கட்டங்களாக தேர்தல் நடத்தி வருகிறது.அவர் எந்த அடிப்படையில் வலியுறுத்தி உள்ளார் என்பதை அறிந்துகொண்டு விளக்கம் அளிக்கப்படும்.கொரோனா தடுப்பு பணிகள் தமிழக அரசு ஒரு அளவிற்கு தான் செய்ய முடியும்.மக்கள் மிக பாதுகாப்பாக இருக்க வேண்டும்.3 வது அலையில் மருத்துவ கட்டமைப்புகள் தயாராக உள்ளது.
கொரோனோ முழு அடைப்பின் போது 25.04 சதவீதம் பொருளாதார வீழ்ச்சி.தற்போது 20 சதவிகிதம் பொருளாதாரம் உயர்ந்து உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களுக்கு பேச வாய்ப்புகள் வழங்கப்படாத நிலை மாறி தற்பொழுது ஜனநாயக முறைப்படி  எதிர்க்கட்சியினருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டு ஜனநாயகம் நிலை நாட்டப்பட்டுள்ளது. 
நான் முதல்முறை சட்டமன்றத்திற்கு செல்லும் போது அச்சமாக இருந்தது.
எதிர் வரும் சட்டமன்ற கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என முதல்வர் உறுதி அளித்து உள்ளார்.என்று பேசினார்