ஒவ்வொரு கட்டிடத்திற்கும் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டி சுற்றுச்சூழலை பாதுகாப்போம்

15 September 2021


ஒவ்வொரு கட்டிடத்திற்கும் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டி சுற்றுச்சூழலை பாதுகாப்போம் உலக பொறியாளர் தினத்தில் பொறியாளர்கள் அரிமா இயக்கத்தினர் முன்னிலையில் உறுதிமொழி

கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் மற்றும் கருவூர் திருக்குறள் பேரவை சார்பில் உலக பொறியாளர் தினம் கொண்டாட்டம்
கரூர் சீனிவாசபுரத்தில் உள்ள கருவூர் திருக்குறள் பேரவை அலுவலகத்தில், கருவூர் திருக்குறள் பேரவை மற்றும் கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் சார்பில் உலக பொறியாளர் தினத்தினை கொண்டாடியது. கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தின் மக்கள் தொடர்பு அலுவலரும், கருவூர் திருக்குறள் பேரவையின் நிறுவனத்தலைவருமான மேலை.பழநியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் லியோ அரிமா சங்க ஆலோசகரும், சமுக நல ஆர்வலருமான டாக்டர் கார்த்திகேயன், சீனிவாசபுரம் லயன் ரமணன், தமிழிசை சங்க நிர்வாகியும், முதுபெரும் தமிழ் உணர்வாளருமான க.பா.பாலசுப்பிரமணியன், ஆநிலை பாலமுருகன், யோகா வையாபுரி ஆகியோர் முன்னிலை வகிக்க, உலக பொறியாளர் தினத்தினை முன்னிட்டு கரூர் நகரின் மூத்த பொறியாளரும், கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க நிர்வாகியுமான இன்ஜினியர் தினகரன், பொறியாளர் குப்தா, இளம்பொறியாளர் மருதாச்சலம் ஆகியோரை கருவூர் திருக்குறள் பேரவை மற்றும் கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் பெருமைபடுத்தியதோடு, அவர்களுக்கு நினைவுப்பரிசினையும் வழங்கி சிறப்பித்தது. மேலும் உலக அளவில் பொறியாளர்களின் சேவை, நாகரீகம் மிக்க இந்நாளில் கட்டிடம், மின்சாரம், மின்னணுவியல் உள்ளிட்ட பல்வேறு துறையில் பொறியாளர்களின் சேவை இன்றியமையாததை கருவூர் திருக்குறள் பேரவை நிறுவனத்தலைவர் மேலை.பழநியப்பன் சுட்டிக்காட்டி எடுத்துரைத்ததோடு, அவர்களின் சேவையை என்றும் நாம் மறக்காமல் நினைவுபடுத்துவோமாக என்றும் பெருமைபடக் கூறினர். மேலும், இந்நிகழ்ச்சியில் உலக பொறியாளர் தினத்தினை முன்னிட்டு பொறியாளர்களும், இலக்கியவாதிகள் மற்றும் ஆன்மீக வாதிகள், அரிமா நிர்வாகிகள் முன்னிலையில், உறுதியான கட்டிடம் கட்டவும், சுற்றுச்சூழலை போற்றி, அந்த கட்டிடத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டுவோம் என்றும், அதற்காக பாடுபடுவோம் என்றும், தரமான கட்டுமானப்பொருட்களையே கையாளுவோம் என்றும் பொறியாளர்கள் உறுதி கூறினர். நிகழ்ச்சி முடிவில் சீனிவாசபுரம் லயன் ரமணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.