கமலஹாசன் சிறந்த நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் அவருக்கு வராத அரசியலை கவனம் செலுத்தத் தேவையில்லை - செல்லூர் ராஜூ

28 October 2020

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அதிமுக மாவட்ட கழக அலுவலகத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,

குறிப்பாக வருகிற அக்டோபர் 29ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிப்பாளையம் பகுதியில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

முதல்வரின் வருகைக்கு வரவேற்பு கொடுக்கும் விதமாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் குற்றத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் வகையில் பிரச்சனைகளை ஏற்படுத்தினாலும் கைது செய்யப்படுவார்கள். விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக குஷ்பூ கைது செய்யப்பட்டுள்ளார் இதற்கு காவல்துறையை பாராட்ட வேண்டும்.

கூட்டணி என்பது இறுதி நேரத்தில் எடுக்கக்கூடிய முடிவு. தோழமை கட்சிகள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளோம். தம்பி நடிகர் விஜய் திரைப்படங்கள் வந்து நீண்ட நாட்களாகிவிட்டது. அவரது ரசிகர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் விஜய் நடத்தியுள்ளார். இதில் கருத்து சொல்ல ஒன்றுமில்லை.

பதவி என்பது தோளில் போட்டு இருக்கும் துண்டு. கொள்கை என்பது வேஷ்டி. எங்களுக்கு கொள்கை தான் முக்கியம்.
முக ஸ்டாலின் அதிமுக அறிவித்துள்ள எந்த திட்டத்தை குறைகூற முடியும். தற்போது வரை கூட்டணி தொடர்ந்து வருகிறது நண்பர்களை இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. கூட்டணி குறித்து நண்பர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.

தேர்தல் நேரத்தில் இறுதி நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். கொரோனா தடுப்பு ஊசி இலவசம் என்பதை பிரதமரும் தமிழக முதல்வரும் அறிவித்துள்ளனர்.

கமலஹாசன் சிறந்த நடிகர் இயக்குனர் நடன இயக்குனர். அவருக்கு என்ன செய்யணுமோ அதை தான் கவனம் செலுத்த வேண்டும் அவருக்கு வராத அரசியலை கவனம் செலுத்தத் தேவையில்லை.

என்று தெரிவித்தார்.