வசந்தம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் ஐக்கிய நாடுகள் சபை தினம் (UNO DAY) ஜூம் செயலி மூலம் கூட்டம்

28 October 2020

தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் ஐக்கிய நாடுகள் சபை தினம் (UNO DAY) ஜூம் செயலி மூலம் தலைவர் லயன் A.சாகுல் ஹமீது தலைமையில் நடைபெற்றது.

தலைவர் கூட்டத்தை முறையே துவக்கி வைத்தார், கொடி வணக்கம் லயன் M.J.ரவிராமன் மற்றும் லயன்ஸ் வழிபாடு லயன் A.B.இப்திசார் பானு ஆகியோர் வாசித்தனர். உலக அமைதிக்கு வேண்டியும் கொரோனா நோயில் இறந்தவர்களுக்கும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் UNO தின மாவட்டத் தலைவர் லயன் ரோஸ்விக் V. ராயன் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினரை சங்கத்தின் முன்னாள் தலைவரும், பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப துறை மாவட்டத் தலைவர் PMJF லயன் R.S.ஜாகிர் உசேன் அறிமுகம் செய்தார்.

சிறப்பு விருந்தினராக பொறியாளர் திரு மு.செந்திலதிபன் கலந்து கொண்டனர் ஐக்கிய நாடுகள் சபை குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் மிகவும் சிறப்பாக எடுத்துரைத்து சிறப்புரை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் முதல் துணை நிலை ஆளுநர் PMJF லயன் சௌமா ராஜரத்தினம், மாவட்ட அவைச் செயலாளர் MJF லயன் SS.வேல் மற்றும் மாவட்ட E - செயலாளர் MJF லயன் C.இளங்கோவன், ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் MJF லயன் Er.M.கனகராஜ், மண்டல ஒருங்கிணைப்பாளர் லயன் VR.அன்பழகன், சாசனத் தலைவர் லயன் H.A.நசீர், மாவட்டத் தலைவர்கள் MJF லயன் Adv. P.ஸ்டீபன், MJF லயன் R.குணசேகரன், MJF லயன் Er. R.ஆறுமுகம், முனைவர் லயன் K.ரமேஷ் மாரி* மற்றும் துணைத் தலைவர் லயன் S.அப்துல்லா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள், வட்டாரத் தகவல்கள், மாவட்டத் தலைவர்கள், பிற சங்க நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியை உறுப்பினர் வளர்ச்சித் தலைவர் லயன் A.ஸ்டாலின் பீட்டர் பாபு தொகுத்து வழங்கினார், செயலாளர் லயன் P.சம்பத் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.