3 புதிய எஸ்யுவிக்களை அறிமுகப்படுத்தும் ஜீப் இந்தியா...!

13 January 2022

தீபாவளி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன் வேகம் பிடித்த வாகனங்களின் விற்பனை, அடுத்தடுத்த புதிய அறிமுகங்கள், சலுகை விற்பனை, எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி தொடக்கம் என்று இப்போது வரை தொடர்கிறது. 

கடந்த சில மாதங்களில் பல்வேறு புதிய கார்கள் மற்றும் பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வரிசையில், ஜீப் இந்தியா நிறுவனம் மூன்று புதிய எஸ்யுவி மாடல்களை இந்த ஆண்டு லான்ச் செய்வதாக அறிவித்துள்ளது. இதில் 7 சீட்டர் கொண்ட மெரிடியன் SUV மாடலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ஜீப் இந்தியா நிறுவனம் உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட கிராண்ட் செரோக்கி, 7 சீட் மெரிடியன் மற்றும் கம்பாஸ் டிரைல் ஹாக் ஆகிய மூன்று மாடல்களை இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.கொரோனா தொற்று காலத்திலும், கடந்த ஆண்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களில் பல நல்ல வளர்ச்சியைக் கண்டன.


அவற்றில், ஜீப் இந்தியா நிறுவனமும் ஒன்று. கடந்த ஆண்டு 130 சதவிகிதம் வளர்ச்சி கண்ட நிலையில், இந்த ஆண்டு புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தாலும், சந்தையில் தங்களுக்கு நல்ல வரவேற்பு ஒருப்பதால், இந்த ஆண்டும் மேலும் வளர்ச்சியைக் காண முடியும் என்பதை ஜீப் இந்தியா தலைவரான நிபுன் மகாஜன் கூறியுள்ளார்."ஆட்டோமொபைல் சந்தையின் பின்னடைவு இருந்தால், நாங்கள் நம்பிக்கை தளராமல் நேர்மறையாக செயல்படுகிறோம்.

கடந்த 4 முதல் 6 ஆண்டுகளில், ஆட்டோமொபைல் சந்தை பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்துள்ளது. தற்போது மீண்டு வருவது மிகவும் ஆரோக்கியமாக உள்ளது" என்றும் அவர் கூறினார்.Jeep என்பது, முன்னணி வாகன உற்பத்தியாளர் மற்றும் மொபிலிட்டி வழங்குநரான Stellantis வழங்கும் பிராண்டுகளின் போர்ட்ஃபோலியோவில் ஒன்றாகும்.

ஜீப் நிறுவனம் அதன் இந்திய போர்ட்ஃபோலியோவில் காம்பஸ் மற்றும் ரேங்லர் என்ற இரண்டு மாடல்களை உற்பத்தி செய்கிறது.பிப்ரவரி 2021ல் உருவாக்கப்பட்ட எஸ்யூவி காம்பஸின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பான, உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட ஜீப் இந்தியாவின் ரேங்லர், 2020 ஆம் ஆண்டில் 5,282 யூனிட்கள் விற்பனையாகின. அதனுடன் ஒப்பிடும்போது 2021 ஆம் ஆண்டில் 12,136 யூனிட்களை விற்பனையாகியுள்ளன. ஒரே ஆண்டில் வாகன விற்பனையில் 130 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது.காம்பஸ் மாடலின் உற்பத்தி, ரஞ்சன்கோன் என்ற இடத்தில் 2017 ஆம் ஆண்டு புனேவில் தொடங்கப்பட்டது.


அதே இடத்தில், கடந்த மார்ச் மாதம் முதல் ரேங்லர் வாகனத்தின் லோக்கல் அசெம்ப்ளி தொடங்கியது.கடந்த ஆண்டு தொடங்கும் போதே, கோவிட் பாதிப்புகள் இருந்தன. ஆனாலும் அனைவரும் மீண்டு வந்தோம். அதே போல, தொற்று நோய்க்கு முந்தைய காலகட்டத்தில் நிறுவனம் 20 சதவிகிதம் வளர்ச்சியைக் கண்டது. காம்பஸ் வாகனம் வரவேற்பைப் பெற்றது, விற்பனையான யூனிட்கள் அதிகரித்தது. அதே போல, தற்போது டிரைல்ஹாக் மாடலை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்துவதாக ஜீப் இந்தியா தலைவர் தெரிவித்தார்.