தேவகோட்டை அருகே வீடு சேதம் தாத்தா, பேத்திக்கு காயம்

26 November 2021


தேவகோட்டை.நவ.26-
தேவகோட்டை அருகே சகாயபுரத்தில் ஆரோக்கியசாமி (60) அவரது மனைவி குழந்தை அம்மாள் பேரன் அபினேஷ் (12)பேத்தி ஹாசினி ஆகியோர் ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனர்.  நேற்று இரவு பெய்த கனமழையால் இன்று காலை  திடீரென வீட்டின் மேற்கூரை ஓடுகள் சரிந்து விழுந்தது. வீட்டினுள்ளே இருந்த ஆரோக்கியசாமி அவரது பேத்தி ஹாசினி ஆகியோர் காயம் அடைந்து  தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
படவிளக்கம்
தேவகோட்டை அருகே சகாயபுரத்தில் ஓட்டுவீடு சரிந்தது