வளரி விளையாட்டு நடுவர்களுக்கான தேசிய கருத்தரங்கு இணைய வழியாக நடைபெற்றது

26 November 2021

சர்வதேச வளரி ஃபவுண்டேஷன் சார்பாக வளரி விளையாட்டு நடுவர்களுக்கான தேசிய கருத்தரங்கு இணைய வழியாக நடைபெற்றது

சர்வதே வளரி ஃபெடரேஷன் சார்பாக  வளரி விளையாட்டுக்கான தேசிய நடுவர் கருத்தரங்கு இணையவழியாக  நடைபெற்றது..இதில்  சர்வதேச வளரி ஃபெடரேஷன்  விளையாட்டு ஆணையத்தின் விதிகளின் தலைவர் டாக்டர்.தியாகு நாகராஜ், சர்வதேச தொழில்நுட்ப இயக்குனர் எஸ்.காமராஜ், இந்திய வளரி விளையாட்டு சங்கத்தின்  பொதுச்செயலாளர் மாஸ்டர் சந்தோஷ் குமார், துணை  தலைவர் மாஸ்டர் கிருஷ்ணகுமார்,கர்நாடகா மற்றும் ஆந்திர  மாநில நிர்வாகிகள்   டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி,மாஸ்டர் பாஸ்கர்  கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினர்.சிறப்பு அழைப்பாளராக, கிரீஸ் நாட்டைச் சேர்ந்த மாஸ்டர் ஆண்ட்ரியாஸ் கொலட்டிஸ் கலந்து கொண்டார்.கருத்தரங்கில்,அரசியலமைப்பு, நிகழ்வு அமைப்பு, வயது வகை, ஆடைக் குறியீடு, பாதுகாப்புக் காவலர் உபகரணங்கள், போட் அமைப்பு, தர நிர்ணய அமைப்பு, வளரி வீசுதல் விதிகள், வளரி படிவங்கள் மற்றும்  சண்டைகள் ஆகியவற்றின் மேலோட்டம் குறித்து நடுவர்களுக்கு ஆலோசணைகள் வழங்கப்பட்டது. இணைய வழியாக நடைபெற்ற இந்த சர்வதேச வளரி விளையாட்டு நடுவர் கருத்தரங்கில் 47 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கருத்தரங்கின் நிறைவில்,இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வளரி  விளையாட்டுகளை மேம்படுத்துவதற்கு புதிய பணிகளைப் பங்கேற்று பொறுப்பேற்றுள்ள மாநில,மாவட்ட செயலாளர்களுக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.