கி.மு 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்ககட்டியில் தமிழி எழுத்துக்கள்!

16 November 2021

கி.மு 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்ககட்டியில் தமிழி எழுத்துக்கள்!

மதுரை மாவட்டம் தேனூரில் ஆற்றின் வெள்ளப்பெருக்கில் கருவேல மரத்தின் அடியில் இருந்து வெளிவந்த பானையில் ஏழு தங்கக்கட்டிகள்  இருந்தன.  ஏழு தங்கக்கட்டிகளிலும் ''தமிழி'' எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஏழிலும் ஒரு பெண்ணின் பெயரே இடம்பெற்றிருந்தது. அந்தப் பெயர் 'கோதை’. அந்த எழுத்துக்கள் எழுதப்பட்ட விதத்தை வைத்து, இது கி.மு 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தொல்பொருள் துறை மதிப்பிட்டுள்ளது. இதில் அதிசயம் என்ன தெரியுமா? எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட தங்கக்கட்டி,  இந்தியாவில் முதன்முதலில் இங்குதான் கிடைத்துள்ளது.

2,100 ஆண்டுகளுக்கு முன் தங்கத்தால் செய்யப்பட்ட தெய்வச்சிலைகள் கூட இதுவரை கிடைக்கவில்லை. எந்தத் தெய்வத்தின் பெயரும் தங்கத்தில் எழுதி, இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

வைகை நதிக்கரை சங்கத் தமிழை மட்டும் வளர்க்கவில்லை, தங்கத் தமிழையும் அதுதான் வளர்த்தது!

இங்கே ஆய்வாளர்களை புருவம் உயர்த்த வைத்தது இரண்டு. 
ஒன்று அது "கோதை" என்ற ஒரு பெண்ணின் பெயர். உலகில் பெண்ணை காலுக்கு கீழே போட்டு மிதித்த போது பெண்ணை பொக்கிசமாகப் போற்றியவன் தமிழன் 

இரண்டாவது வியப்பு, உலகில் இதுவரை எழுத்து பதித்த தங்கக்கட்டிகளை கண்டெடுத்ததே இல்லை. நம் தமிழர்கள் எவ்வளவு செல்வச் செழிப்பாக வாழ்ந்திருப்பார்கள் என்பதைதான் இது விளக்குகிறது.

தற்போது நடைபெற்று வரும் கீழடி அகழாய்விலும் நான்கம் கட்ட அகழாய்வில் தங்க ஆபாரணங்கள் கிடைத்துள்ளன.  இதன் காலமும் கி.மு.6ம் நூற்றாண்டே ஆகும்.
           
அன்புடன்,
செந்தமிழ் பால,
தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்.