சாத்தூர் வைப்பாற்று பாலத்தின் தேசிய நெடுஞ்சாலை பக்கவாட்டு சுவர் தொடர் மழை காரணமாக இடிந்து விழுந்தது...

10 May 2021

சாத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வைப்பாற்று மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது அதை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாத்தூரில் வைப்பாற்றின் குறுக்கே காமராஜர் ஆட்சிக்காலத்தில் 1955 ஆம் ஆண்டு கட்டப்பட்ட தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் உள்ளது. 

பின்னர் கடந்த 2000 ம் ஆண்டு நான்கு வழிச் சாலை அமைக்கப்படும் பொழுது அந்த மேம்பாலம் அருகில் ஒரு பாலம் கட்டப்பட்டது. நான்கு வழி சாலையின் குறுக்கே வாகனங்கள் செல்ல கூடாது என்பதற்காக இந்த பாலங்களின் ஓரத்தில் இணைப்பு சாலை உருவாக்கப்பட்டு பாலத்தின் கீழ் பக்கம் வழியாக வாகனங்கள் சென்று வர போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.

 இந்நிலையில் இணைப்புச் சாலை பாதுகாப்பிற்காக பாலத்தில் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க பக்கவாட்டில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. இந்த தடுப்புச்சுவர் மழையின் காரணமாக சரிந்து விழுந்தது. 

இதனால் இணைப்பு சாலை வழியாக செல்லும் வாகனங்களுக்கு இடையூறாக உள்ளது. மேலும் சென்னை, கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை என்பதால் வாகனங்கள் அதிகம் சென்று வரும் நிலையில் பாலத்தின் பக்கச்சுவர் இடிந்து விழுந்ததால் பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு. பாலம் சேதம் அடையும் அபாயம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து மேலும் அதிக சேதம் ஏற்படாத வண்ணம் பாலத்தின் பக்கவாட்டுச் சுவரினை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை. வைத்துள்ளனர்.