சாத்தூரில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு செய்தனர்..

10 May 2021


சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் சாத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதனை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 அதன்படி தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது பின்னர் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவுறுத்தப்பட்டது. இருந்தும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 10ம் தேதி முதல் 24ந் தேதி வரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கை அரசு அறிவித்தது.

 இந்நிலையில் சாத்தூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் காவல்துறையினர் சாத்தூர் பகுதியில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கொரோனா முழு ஊரடங்கு பாதுகாப்பு குறித்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் சாத்தூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சாத்தூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் இருவரும் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு செய்தனர். 

அப்போது பேசுகையில் பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்து வரவேண்டும். வங்கி மற்றும் கடைகளுக்கு செல்லும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்பாக செயல்பட வேண்டும் என்றும் தினந்தோறும் கடைகளுக்கு வருவதை தவிர்த்து ஊரங்கு காலத்தில் தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி செல்லுமாறு அறிவுறுத்தினர்.

 பொதுமக்களின் நலன் கருதி அக்கறை செலுத்தி போலீசார் எடுத்துரைத்த விதம் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.